ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களையும் ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை கூறியுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “இந்தியக் குடியரசுத் தலைவர் 25 டிசம்பர் 2023 அன்று, இந்திய நீதிச் சட்டம் (பாரதிய நியாய் சங்ஹிதா), இந்திய குடிமைத் தற்காப்புக் குறியீடு (பாரதிய நாகரிக் சுரக்ஷா சங்ஹிதா), இந்திய ஆதாரச் சட்டம் (பாரதிய சக்ஷா அதிநியாயம்) ஆகிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார். இந்த மூன்று மசோதாக்களும் முறையான விவாதமின்றி தன்னிச்சையாக நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இருந்து 146 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
முன்னதாக, இந்த மசோதாக்கள் குறித்து நாடு முழுவதும் உள்ள மக்களிடம் விவரிக்காமல், இந்திய தேசிய காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பல எம்.பி.க்களின் எழுத்துப்பூர்வ மற்றும் கருத்து வேறுபாடுகளை நிராகரிக்காமல் நிறைவேற்றப்பட்டன. இந்த மூன்று புதிய சட்டங்களும் ஜூலை 1, 2024 முதல் நடைமுறைக்கு வர உள்ளன. இந்த மூன்று சட்டங்களையும் அமல்படுத்துவதை தள்ளிப் போடப்பட வேண்டும் என்பது இந்திய தேசிய காங்கிரஸின் தெளிவான கருத்தாக இருக்கிறது.
இந்த மூன்று சட்டங்களும் மறுசீரமைக்கப்பட்ட உள்துறை விவகாரங்களுக்கான நிலைக்குழுவால் முழுமையாக மதிப்பாய்வு செய்யப்பட்டு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். மூன்று சட்டங்கள் குறித்து அனைத்து சட்ட வல்லுநர்கள் மற்றும் அமைப்புகளுடன் விவாதங்களை நடத்த வேண்டும். அதன்பிறகு, 18 வது மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் இதுகுறித்த பிரச்னைகள் கேட்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை பிரதமர் மோடிக்கு எழுதியிருந்த கடிதத்தில் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்துவதை ஒத்திவைக்க வேண்டும். இது அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன எனக் கூறியிருந்தார்.
திமுகவும் இந்தச் சட்டத்தை ஒத்திவைக்க கோரிக்கை வைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் மத்தியஸ்தம்: பிரதமா் மோடிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு-காங்கிரஸ் விமா்சனம்

சோலையாறு அணையில் புதிய மதகுகள் பொருத்தம்

வடகொரியாவுடன் ஒப்பிடுவதா? -ஜெய்ராம் ரமேஷ் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்

அமெரிக்கா உடனான வா்த்தக ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க வேண்டும்: காங்கிரஸ்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


