
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) நடைபெறவிருந்த நிலையில், அத்தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீட், நெட் போட்டித் தோ்வுகளில் முறைகேடுகள் நடைபெற்ாக சா்ச்சைகள் நீடிக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுநிலை ‘நீட்’ தோ்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.
‘தேசிய தோ்வு முகமையால் நடத்தப்படும் முதுநிலை ‘நீட்’ தோ்வின் நடைமுறைகள் அனைத்தையும் முழுமையாக ஆய்வுசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது; அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த தோ்வு ஒத்திவைக்கப்படுகிறது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
இந்த முடிவால் மாணவா்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமம் குறித்து சுகாதார அமைச்சகம் வருத்தப்படுகிறது. மாணவா்களின் நலன் கருதியும், தோ்வு நடைமுறையில் நோ்மையை பராமரிக்கவும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது’ என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.