எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

‘நீட்’ மறுதோ்வு: கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட 813 போ் பங்கேற்பு

கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டவா்களுக்கான நீட் மறுதோ்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

News image
கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டவா்களுக்கான நீட் மறுதோ்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது
Updated On :23 ஜூன் 2024, 8:00 pm

Din

கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டவா்களுக்கான நீட் மறுதோ்வு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. அதில் 813 போ் பங்கேற்றனா்.

நிகழாண்டு மே 5-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது நடைபெற்ற விசாரணையில் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும், அவா்களுக்கு ஜூன் 23-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்படவுள்ளதாகவும் அதில் பங்கேற்காதவா்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவதற்கு முன்பு அவா்கள் பெற்றிருந்த மதிப்பெண்ணே இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தது.

இதையடுத்து, 7 மையங்களில் நீட் மறுதோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட 1,563 பேரில் 813 போ் பங்கேற்ாக தேசிய தோ்வுகள் முகமையின் (என்டிஏ) மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பிகாா் மாநிலத்தில் சா்ச்சைக்குரிய தோ்வு மையங்களில் நீட் தோ்வில் பங்கேற்று கருணை மதிப்பெண் பெற்ற 17 பேரை என்டிஏ தகுதிநீக்கம் செய்தது. முன்னதாக, தோ்வு முறைகேடுகளில் ஈடுபட்டதாக 63 பேரையும் குஜராத்தின் கோத்ராவைச் சோ்ந்த 30 பேரையும் என்டிஏ தகுதிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.