அயோத்தி ராமர் கோயில் மேற்கூரை கசிகிறதா?

ராமர் கோயில் மேற்கூரை கசிவதாக அக்கோயிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்தார்.
அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்
Published on
Updated on
2 min read

அயோத்தி ராமர் கோயில் மேற்கூரை கசிவதாக அக்கோயிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் இன்று (ஜூன் 24) தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், ராமர் கோயில் மேற்கூரையில் மழை நீர் தேங்குவதாகவும், வெளியேறுவதற்கு முறையான அமைப்பு இல்லை எனவும் பூசாரி குறிப்பிட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் கடந்த ஜனவரி மாதம் ஸ்ரீ பால ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெற்றது. ஜனவரி மாதம் முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் ஸ்ரீ பால ராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.

இதனிடையே பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்து 5 மாதங்களே ஆன நிலையில், கோயிலின் மேற்கூரை கசிவதாக தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், ''இது ஆச்சரியமளிக்கிறது. பலதரப்பட்ட பொறியாளர்களால் கட்டப்பட்ட கோயிலின் பிராண பிரதிஷ்டை நிகழ்வு ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், மேற்கூரையில் இருந்து நீர் கசிகிறது. இவ்வாறு நடக்கும் என யாரும் கற்பனை கூட செய்திருக்கமாட்டார்கள்'' எனக் கூறினார்.

மேலும், ''முதல் மழையில் ஸ்ரீ பாலராமர் சிலை உள்ள கருவறையின் மேற்புறத்தில் நீர் கசிந்தது. இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, என்ன செய்ய வேண்டும் என்பதை கண்டறிய வேண்டும். இது மிகவும் முக்கியமானது. மேற்கூரையில் நீர் வெளியேறுவதற்கு இடமில்லை. தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், பக்தர்கள் தரிசனம் செய்வதற்கும் சிரமம் ஏற்படும்'' எனக் குறிப்பிட்டார்.

ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் / ரிபேந்திர மிஸ்ரா
ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் / ரிபேந்திர மிஸ்ராகோப்புப் படங்கள்

கட்டுமானக் குழு தலைவர் கருத்து

இது குறித்து பேசிய அயோத்தி ராமர் கோயில் கட்டுமானக் குழு தலைவர் ரிபேந்திர மிஸ்ரா, ''நான் அயோத்தியில் உள்ளேன். முதல் தளத்தில் மழைநீர் வெளியேற வழிவகை செய்யப்படுள்ளது. குரு மண்டபம் வானத்தை நோக்கியவாறு உள்ளது.

முதல் தளத்தில் பணிகள் நடைபெற்று வருவதால், அந்த வழித்தடத்தின் குழாயில் நீர் கசிவதைக் கண்டேன். பணிகள் முடிந்ததும் நீர் கசிந்து வெளியேறும் குழாய் மூடப்படும். அனைத்து மண்டபங்களும் நீரை வெளியேற்றும் வகையில் சாய்தளத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் கருவறையில் நீர் வடிகால் அமைப்பு இல்லை. கருவறையில் தேங்கும் நீர் அவ்வபோது கண்காணித்து மனித ஆற்றல் மூலம் வெளியேற்றப்படுகிறது எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com