அவசரநிலை காலம்: மாறுவேடத்தில் மோடி!
அவசரநிலை காலத்தின்போது பிரதமர் மோடி தன் தோற்றத்தை மாற்றி அலைந்ததாக அவருடைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.


அவசரநிலை காலத்தில் அரசியல் ரீதியான கைதுகள் நடத்தப்பட்டதால், அப்போது இளைஞராக இருந்த நரேந்திர மோடி தனது தோற்றத்தை மாற்றித் அலைந்ததாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்து இன்றுடன் 50 ஆண்டுகளாகும் நிலையில், அவசரநிலை காலத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சீக்கியர் வேடத்தில் மோடி
இதுதொடர்பான விவரங்கள் மோடி ஆர்கைவ் என்ற எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
”அவசரநிலைக் காலத்தில் மக்கள் ஒன்றிணைந்து இந்த ஜனநாயகத்தின் மீதான தாக்குதலை எதிர்த்தனர். மிகவும் சவாலான இருண்ட காலம் அது. அந்த நேரத்தில் பல தலைவர்களுடன் பணிபுரியும் அனுபவம் எனக்குக் கிடைத்தது” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
’அவசரநிலைக் காலத்தில் மற்ற அரசியல்வாதிகளைப் போலவே கைதாவதைத் தவிர்க்க மோடியும் பல்வேறு வேடங்களில் திரிந்துள்ளார். அவரை யாரும் பெரிதாக அடையாளம் காணவில்லை. அவர், காவி உடை அணிந்து துறவியைப் போலவும், சீக்கியரைப்போல தலையில் டர்பன் அணிந்தும் மாறுவேடத்தில் அலைந்துள்ளார். ஒருமுறை சிறையில் ஒரு ஆவணத்தை வழங்க சிறை அதிகாரிகளை ஏமாற்றி வெற்றிகரமாக உள்ளே சென்றுள்ளார்’ என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...