
ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்கின் இடைநீக்கத்தை ரத்து செய்து அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்தாண்டு மழைக்காலக் கூட்டத்தொடரின் போது அமளியில் ஈடுபட்ட காரணத்துக்காக சஞ்சய் சிங்கை ஓராண்டு இடைநீக்கம் செய்து ஜூலை 14, 2023 அன்று ஜனதீப் தன்கர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று மாநிலங்களவைக் கூட்டம் தொடங்கிய நிலையில் தடைக்காலம் முடிவதற்கு முன்னதாகவே சஞ்சய் சிங்கின் இடைநீக்கத்தை ரத்து செய்து ஜகதீப் தன்கர் உத்தரவிடுள்ளார்.
மேலும், நாடாளுமன்ற வளாகத்துக்குள் வியாழக்கிழமை முதல் நுழைவதற்கு அவைத் தலைவர் அனுமதி அளித்துள்ளதாக மாநிலங்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களுடன் இன்று காலை பேசிய சஞ்சய் சிங் கூறியதாவது:
“எனது இடைநீக்கத்தை ரத்து செய்த குடியரசுத் துணைத் தலைவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலங்களவை இன்று தொடங்கவுள்ள நிலையில், கூட்டுக் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் உரையை நாங்கள் புறக்கணிக்கிறோம்.
அரவிந்த் கேஜரிவாலின் கைதை கண்டித்து புறக்கணிக்க முடிவெடுத்துள்ளோம். குடியரசுத் தலைவரின் உரை என்பது மத்திய அரசு எழுதிக் கொடுத்தது என்பதால் புறக்கணிக்கிறோம்.” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கிட்டத்திட்ட ஓராண்டு இடைநீக்கத்துக்கு பிறகு நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்த சஞ்சய் சிங், ஆம் ஆத்மி எம்பிக்களுடன் இணைந்து கேஜரிவால் கைதுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.