நீட் முறைகேடு விவகாரத்தில் மக்களவை, மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் மக்களவை, மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
நீட் முறைகேடு குறித்து பேச வலியுறுத்தி இந்தியா கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் பலர் மனு அளித்திருந்தனர். நீட் முறைகேடு தொடர்பாக உடனே விவாதம் நடத்த மக்களவையில் கோரிக்கை வைக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு முன் நீட் பிரச்னை பற்றி வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறியிருந்தார்.
மேலும், இதுகுறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறுகையில், “குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அனைத்து விஷயங்களையும் நீங்கள் எழுப்பலாம். உங்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும். ஆனால், நன்றி தெரிவிக்கும் போது வேறு எந்த பிரச்னையையும் நீங்கள் எழுப்ப அனுமதிக்க முடியாது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3 மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா

சவால்களை வாய்ப்புகளாக மாற்றியவா் பிரதமா் மோடி - மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா புகழாரம்
ஆம் ஆத்மியின் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தா எம்.பி. நீக்கம்!

8 எம்.பி.க்கள் மீதான இடைநீக்கம் ரத்து!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


