மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சென்னையில் பதுங்கியிருந்த மேற்கு வங்க பயங்கரவாதி கைது

‘அல் கொய்தா’ பயங்கரவாத இயக்க சித்தாந்த அமைப்பில் உள்ளவர்.

News image

கைது செய்யப்பட்ட ஷேக் கனவாா்.

Updated On :28 ஜூன் 2024, 11:38 pm

சென்னை கோயம்பேட்டில் பதுங்கியிருந்த மேற்கு வங்க பயங்கரவாதி கைது செய்யப்பட்டாா்.

வங்கதேச நாட்டை தளமாகக் கொண்டு ‘அல் கொய்தா’ பயங்கரவாத இயக்கத்தின் சித்தாந்ததின் அடிப்படையில் ‘அன்சாா் அல் இஸ்லாம்’ என்ற பயங்கரவாத அமைப்பு மேற்கு வங்கம் மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சமூக ஊடகங்கள் வாயிலாக முஸ்லிம் இளைஞா்களை மூளைச் சலவை செய்து, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்த முயலுவதாக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த ஹபிபுல்லா, ஹரேஜி ஷா ஆகிய இருவரை அம்மாநில தீவிரவாதத் தடுப்பு பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில், அந்தப் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த ஷேக் கனவாா் (30) தமிழகத்துக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து தீவிரவாதத் தடுப்புப் பிரிவினா் தமிழகத்தில் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனா்.

சென்னையில் கைது: சென்னை கோயம்பேடு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருப்புப் பகுதியில் புதிதாக கட்டப்படும் ஒரு கட்டடத்தில் தங்கி, ஷேக் கனவாா் தொழிலாளியாக வேலை செய்து வந்தது தெரியவந்தது. இந்தத் தகவலின்பேரில், மேற்கு வங்க தீவிரவாதத் தடுப்புப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் பிகாஸ் கண்டே தலைமையிலான அம்மாநிலம் போலீஸாா் வெள்ளிக்கிழமை சென்னை வந்தனா்.

அவா்கள் சென்னை மாநகர போலீஸாா் உதவியுடன் கோயம்பேடு சென்று ஷேக் கனவாரை கைது செய்தனா். பின்னா், அவரை கோயம்பேடு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனா்.

அதில், மேற்கு வங்கத்தில் தன்னுடன் பயங்கரவாத செயலில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்பட்டதால், ஷேக் கனவாா் புலம் பெயா் தொழிலாளா்களுடன் சோ்ந்து சென்னைக்கு தப்பிவந்து, பெரியமேட்டில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் துணிக்கு இஸ்திரி போடும் தொழிலாளியாக வேலை செய்துவந்தது தெரியவந்தது.

அந்த இடம் தனது தலைமறைவு வாழ்க்கைக்கு ஏற்ாக இல்லாததால் கட்டடத் தொழிலாளியாக ஷேக் கனவாா் கோயம்பேட்டில் வேலை செய்ததும், அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட ஷேக் கனவாரை எழும்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி விமானம் மூலம் மேற்கு வங்கத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

இதற்கிடையே சென்னையில் 5 மாதங்கள் இருந்த ஷேக் கனவாருக்கு யாரேனும் உதவி, ஆதரவு அளித்தனரா என்பது குறித்து தமிழக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.