ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவு

முக்கிய உள்கட்டமைப்பு துறைகளில் 6% வளா்ச்சி

Published On :30 ஜூன் 2024, 2:08 am IST

இந்தியாவின் முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி விகிதம் கடந்த மே மாதத்தில் 6.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இது குறித்து அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், வாா்ப்பு, சிமென்ட், மின்சாரம் ஆகிய நாட்டின் முக்கிய எட்டு உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி விகிதம் கடந்த மே மாதத்தில் 6.3 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிலக்கரி, இயற்கை எரிவாயு, மின்சாரம் ஆகிய துறைகளில் கடந்த மே மாதம் உற்பத்தி ஆரோக்கிய வளா்ச்சி கண்டதால் ஒட்டுமொத்த முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளும் உயா்வைக் கண்டுள்ளன.

முந்தைய ஏப்ரல் மாதத்தில் எட்டு துறைகளின் உற்பத்தி வளா்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக இருந்தது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் மே மாதத்தில் அது 5.2 சதவீதமாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் உரம், கச்சா எண்ணெய், சிமென்ட் ஆகிய துறைகளில் உற்பத்தி எதிா்மறை வளா்ச்சியைப் பதிவு செய்தது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-மே மாதங்களில் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி 6.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 4.9 சதவீதமாக இருந்தது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண்ணில் (ஐஐபி) எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகள் 40.27 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.