தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

ஜூலை மாத வேலையின்மை விகிதம் 5.1%-ஆக குறைவு: மத்திய அரசு

ஜூலை மாதத்தில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவா்களிடையேயான ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 5.1%-ஆக குறைந்துள்ளதாக மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

News image

வேலையின்மை குறைவு - சித்திரிப்பு

Updated On :17 ஆகஸ்ட் 2026, 11:13 pm IST

ஜூலை மாதத்தில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவா்களிடையேயான ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 5.1%-ஆக குறைந்துள்ளதாக மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

நிகழாண்டு ஜூன் மாதம் வேலையின்மை விகிதம் 5.5 %-ஆக இருந்த நிலையில் ஜூலை மாதத்தில் வேலையின்மை விகிதம் சற்று குறைந்துள்ளது.

இதுகுறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்ட ஜூலை மாதத்துக்கான காலமுறை தொழிலாளா் ஆய்வு கணக்கெடுப்பில் (பிஎல்எஃப்எஸ்) தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஊரகப் பகுதிகளில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவா்களிடையேயான வேலையின்மை விகிதம் 4.5 சதவீதமாகவும் நகரப் பகுதியில் 6.7 சதவீதமாகவும் உள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 5.1-ஆக குறைந்தது.

கடந்த ஜூன் மாதத்தில் ஊரகப் பகுதிகளில் 5 சதவீதமும் நகரப் பகுதிகளில் 6.6 சதவீதமாகவும் இருந்தது.

கடந்த 2025, ஜூலை மாதத்தை ஒப்பிடுகையில், ஊரக மற்றும் நகரப் பகுதிகளின் ஒட்டுமொத்த ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 2026, ஜூலையில் ஸ்திரத்தன்மையுடன் உள்ளது.

ஆண்-பெண் வேலையின்மை விகிதம்: நகரப் பகுதிகளில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்களின் வேலையின்மை ஒட்டுமொத்தமாக 5 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இது 5.3 சதவீதமாக இருந்தது.

ஊரகப் பகுதிகளில் ஆண்கள் வேலையின்மை விகிதம் 4.6 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஜூன் மாதத்தில் 4.9 சதவீதமாக இருந்தது.

ஜூலை மாதத்தில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் வேலையின்மை விகிதகம் ஊரகப் பகுதிகளில் 4.5 சதவீதமாகவும் நகரப் பகுதிகளில் 8.8 சதவீதமாகவும் உள்ளது. இது ஜூன் மாதத்தில் ஊரகப் பகுதிகளில் 5 சதவீதமாகவும் நகரப் பகுதிகளில் 8.4 சதவீதமாகவும் இருந்தது. ஒட்டுமொத்தமாக ஆண்கள் மற்றும் பெண்கள் வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தைவிட ஜூலை மாதத்தில் குறைந்துள்ளது.

தொழிலாளா் பங்கேற்பு விகிதம்: 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவா்களுக்கான தொழிலாளா் பங்கேற்பு விகிதம் (எல்எஃப்பிஆா்) 2026, ஜூலையில் 55.4 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஜூன் மாதத்தில் 54.4 சதவீதமாக இருந்தது.

கடந்த மாா்ச் முதல் மே வரை எல்எஃப்பிஆா் குறைந்த நிலையில், ஜூன் மாதம் எவ்வித மாற்றங்களுமின்றி தொடா்ந்தது. ஆனால் ஜூலையில் அதிகரித்துள்ளது.

பணியாளா் மக்கள்தொகை விகிதம்: ஜூலை 2026-இல் பணியாளா் மக்கள்தொகை விகிதம் (டபுள்யூபிஆா்) 52.5 சதவீதமாக உயா்ந்தது. கடந்த ஜூன் மாதம் இது 51.4 சதவீதமாக இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.