மத்திய அரசில் 8,326 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
மத்திய அரசில் காலியாக உள்ள 8,326 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசின் பல்வேறு துறைகள், அமைச்சகங்கள், அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள், பணியாளா் தோ்வாணையம் மூலம் நிரப்பப்படுகின்றன.
அவ்வகையில், எம்டிஎஸ் எனப்படும் பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளா் பணிக்கு 4,887 காலி இடங்கள் மற்றும் ஹவில்தாா் (சிபிஐசி மற்றும் சிபிஎன்) பணிக்கு 3,439 காலி இடங்கள் என மொத்தம் 8,326 காலிப்பணியிடங்களை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நிரப்பவுள்ளது.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவா்கள் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவா்கள் இணையதளத்தில் ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த ஆக.1 வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பிக்கும் முறை, தோ்வு தேதி, தோ்வு முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பணியாளா் தோ்வு மையத்தின் அதிகாரபூா்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.