
அனைத்து மதங்களைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான் புனித யாத்திரைத் திட்டத்தை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இன்று அறிவித்தார்.
சிவசேனை எம்எல்ஏ பிரதாப் சர்நாயக்கின் கவன ஈர்ப்பு நோட்டீசுக்கு பதிலளிக்கும் வகையில், மாநில சட்டப் பேரவையில் ஷிண்டே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சர்நாயக் தனது கோரிக்கையில்,
அனைத்து மதங்களைச் சேர்ந்த மூத்த குடிமக்களும் சொந்தமாகப் புனிதப் பயணம் மேற்கொள்வது என்பது இயலாத காரியமாகும். அவர்களுக்கு அரசு வழிவகை செய்ய வேண்டும்.
மூத்த குடிமக்கள் சிலருக்கு துணையில்லாமலும், ஒருசிலருக்கு நிதிப் பிரச்சனை, எப்படிச் செல்வது? என்பது குறித்த புரிதல்கள் இல்லாமல் இருக்கலாம். எனவே அவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் அரசு வழிவகை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்கும் வகையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இந்தத் திட்டத்திற்கு இன்று ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அனைத்து மதத்தினரும் பயன்பெறும் வகையில் பிரதமரின் "தீர்த்த தர்ஷன் யோஜனா" என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.