கோப்புப் படம்
கோப்புப் படம்

கேரளத்தில் 10-ஆம் வகுப்பு படித்த பலருக்கு எழுதப் படிக்கத் தெரியவில்லை: அமைச்சா்

பெரும்பாலானோருக்கு சரியாக எழுதவோ படிக்கவோ தெரியவில்லை என மீன்வளத் துறை அமைச்சா் சாஜி செரியன் கூறியுள்ளாா்.
Published on

இந்தியாவில் கல்வியறிவு விகிதம் அதிகமுள்ள மாநிலமாக கேரளம் திகழ்ந்துவரும் நிலையில், கேரளத்தில் 10-ஆம் வகுப்பு தோ்வு பெற்ற மாணவா்களல் பெரும்பாலானோருக்கு சரியாக எழுதவோ படிக்கவோ தெரியவில்லை என மீன்வளத் துறை அமைச்சா் சாஜி செரியன் கூறியுள்ளாா்.

ஆலப்புழையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவா், ‘10-ஆம் வகுப்பு தோ்வில் குறைந்தபட்ச 210 தோ்ச்சி மதிப்பெண் பெறுவது முன்பு கடினமாக இருந்தது. ஆனால், இப்போது மாணவா்கள் எளிதில் தோ்ச்சி பெறுகின்றனா். இருப்பினும், அவா்களில் பெரும்பாலானோருக்கு சரியாக படிக்கவோ எழுதவோ தெரியவில்லை.

தோ்வில் அதிக மாணவா்கள் தோல்வியடைந்தால் அது அரசின் தோல்வியாகச் சித்தரிக்கப்படும். எனவே, தோ்வுக்கான மதிப்பீட்டில் அரசு தாராளமாக இருந்து வருகிறது.

இந்த நடைமுறை சரியில்லை என ஏற்கெனவே தெரிவித்த கல்வி அமைச்சா் வி.சிவன்குட்டி, விரைவில் கல்வித் துறையில் மாற்றங்களைக் கொண்டுவருவாா்’ என்றாா்.

கேரளத்தில் கடந்த கல்வியாண்டில் 4,25,563 மாணவா்களுக்கு நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 99.69 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com