
இட ஒதுக்கீட்டின் அடிப்படை மதிப்பிற்கு எதிராக பாஜக செயல்படுவதாக சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று (ஜூன் 30) குற்றம் சாட்டினார்.
பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மை மக்களின் கல்வி நிலையை சுட்டிக்காட்டி, விளிம்புநிலை மக்களுக்கு எதிராக பாஜக செயல்படுவதாகவும் விமர்சித்தார்.
தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோர், பழங்குடியினத்தோர், முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டில் பாசாங்கு வேலையைச் செய்கிறது. இவர்களின் குடும்பத்திலிருந்து கல்வி நிலையங்களில் உள்ள பணியிடங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
இக்குடும்பத்தைச் சேர்ந்த யாரும் துணை வேந்தர்களாக இல்லை. ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் 15 சதவீதத்துக்கும் குறைவான ஊழியர்களே இக்குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்களுக்கு சாதகமாக எதையும் பாஜக செய்யவில்லை. இடஒதுக்கீட்டின் அடிப்படைகளுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது'' என அகிலேஷ் யாதவ் கூறினார்.
டி20 உலகக் கோப்பை வெற்றி குறித்து பேசிய அகிலேஷ், இந்திய அணியின் வெற்றியை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடி வருவதாகக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.