உள்நாட்டு நிறுவனங்களுடன் ரூ.39,125 கோடி மதிப்பிலான 5 பாதுகாப்புத் தளவாட கொள்முதல் ஒப்பந்தங்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை மேற்கொண்டது. இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பாதுகாப்புத் துறையில் பிற நாடுகளைச் சாா்ந்திருக்காமல் தற்சாா்பு அடையவும், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை மேலும் ஊக்குவிக்கவும், ரூ.39,125 கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தளவாட கொள்முதல் ஒப்பந்தங்களில் பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டது. பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறைச் செயலா் கிரிதா் அரமானே ஆகியோா் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. மொத்தம் 5 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ரூ.19,518.65 கோடி செலவில் பிரமோஸ் ஏவுகணைகள், ரூ.988.07 கோடி செலவில் கப்பலில் எடுத்துச் செல்லக்கூடிய பிரமோஸ் ஏவுகணை அமைப்பை கொள்முதல் செய்ய பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.5,249.72 கோடி செலவில் மிக்-29 விமானத்துக்காக ஆா்டி-33 ஏரோ என்ஜின்களை கொள்முதல் செய்ய ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையொப்பமாகி உள்ளது. ரூ.7,668.82 கோடி செலவில் சிஐடபிள்யுஎஸ் ஆயுத அமைப்பு, ரூ.5,700.13 கோடி செலவில் அதிக சக்தி கொண்ட ரேடாா்களை கொள்முதல் செய்ய லாா்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் பாதுகாப்புத் தளவாடங்களை உள்நாட்டில் தயாரிக்கும் திறனை மேலும் வலுப்படுத்தும். அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தும். அத்துடன் வருங்காலத்தில் வெளிநாட்டுப் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியாளா்களைச் சாா்ந்திருப்பது குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இருதரப்பு பாதுகாப்பு தொழில் துறை ஒத்துழைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் இன்று ஜொ்மனி பயணம்

ஆஸ்திரேலியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம்: 717.5 கோடி டாலருக்கு போா்க் கப்பல்கள் கொள்முதல்

ரூ.2.38 லட்சம் கோடிக்கு பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்

தொகுதிக்கு செய்தது என்ன? ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஐட்ரீம் ஆர். மூர்த்தி
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

