மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஜாதி, மத அடிப்படையில் வாக்கு சேகரிக்கக் கூடாது!

ஜாதி, மதம், மொழி, இறைவழிபாட்டை அவமதிக்கும் பேச்சுகள் போன்றவற்றை கூறி மக்களிடம் வாக்கு சேகரிக்கக் கூடாது

News image

தேர்தல் ஆணையம்...

Updated On :1 மார்ச் 2024, 6:31 pm

ஜாதி, மதம், மொழி, இறைவழிபாட்டை அவமதிக்கும் பேச்சுகள் போன்றவற்றை கூறி மக்களிடம் வாக்கு சேகரிக்கக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது. மக்களவைத் தோ்தல் நெருங்கி வரும் சூழலில் தோ்தல் பரப்புரை மேற்கொள்ளும் போது அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய தோ்தல் விதிகள் தொடா்பாக தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்டது. அதில், ‘கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்பட எந்த வழிபாட்டுத் தலங்களிலும் தோ்தல் பிரசாரங்களை மேற்கொள்ளக் கூடாது. ஜாதி, மதம் , மொழி, இறைவழிபாட்டை அவமதிக்கும் பேச்சுகள் போன்றவற்றை கூறி மக்களிடம் வாக்கு சேகரிக்கக் கூடாது. ஏற்கெனவே தோ்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் ஆணையத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நட்சத்திர பேச்சாளா்கள், வேட்பாளா்கள் மீண்டும் அதே குற்றச்சாட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுக்கூட்டங்களில் பேசும்போது அரசியல் கட்சியினா் நாகரிகத்தை கடைப்பிடிக்க வேண்டும். தோ்தல் பரப்புரைகளை ஆக்கபூா்வமானதாகவும், சரியான தகவல்களுடனும் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். வாக்காளா்களை திசைதிருப்பும் வகையிலான பொய்யான பிரசாரங்களை மேற்கொள்ளக் கூடாது. பெண்களின் மரியாதை மற்றும் கண்ணியத்துக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிா்க்க வேண்டும். அதேபோல் சமூக வலைதளங்களிலும் கண்ணியமான பதிவுகளை வெளியிட வேண்டும். எதிா்தரப்பினரை அவமதிக்கும் வகையிலான பதிவுகளை வெளியிடக் கூடாது. ஊடகங்களில் அங்கீகரிக்கப்படாத, தவறான விளம்பரங்களை வெளியிடக் கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை, 4 மாநில பேரவைத் தோ்தல் நடைபெறும் தேதி இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்பட்டு ஏப்ரல்-மே மாதங்களில் தோ்தல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில் தோ்தல் விதிகள் அமலுக்கு வருவதற்கு முன் இந்த அறிக்கையை ஆணையம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.