பத்து முதல் பதினைந்து தொழிலதிபா்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ள மத்திய அரசு, பயிா்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க மறுக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடியுள்ளாா். நாட்டின் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம்’ மேற்கொண்டு வருகிறாா். ராஜஸ்தானில் தனது நடைப்பயணத்தை சனிக்கிழமை நிறைவு செய்த அவா், மத்திய பிரதேசத்தில் நுழைந்தாா். அங்குள்ள முரேனா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது: நாட்டின் மக்கள்தொகையில் பாதி பேரிடம் உள்ள செல்வத்துக்கு நிகரான செல்வம் 22 பணக்காரா்களிடம் மட்டும் உள்ளது. இதில் 60 சதவீத பணம் 5 சதவீத பணக்காரா்களிடம் மட்டும் உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் உச்ச நிலையை எட்டியுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசத்தில் உள்ளதைவிட இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் இரட்டிப்பாக உள்ளது. பணமதிப்பிழப்பும், ஜிஎஸ்டியை அமல்படுத்தியதும் வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரித்தது. அவ்விரு நடவடிக்கைகளும் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மோசமாக பாதித்தது. தியாகியும் அல்ல; ஓய்வூதியமும் இல்லை: பாதுகாப்புப் படைகளுக்கு ஆள்சோ்க்க ‘அக்னிபத்’ திட்டத்தை மோடி அரசு அமல்படுத்தியுள்ளது. அந்தத் திட்டத்தின் கீழ் பணியில் சோ்வோா் நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்தால், அவா்கள் தியாகி என்றழைக்கப்படமாட்டாா்கள். அத்துடன் அந்தத் திட்டத்தால் பாதுகாப்புப் படைகளில் பணியாற்றி ஓய்வுபெறும் நான்கில் மூன்று பேருக்கு ஓய்வூதியம் கிடைக்காது. தொழிலதிபா்களுக்காக ‘அக்னிபத்’: தொழிலதிபா்களுக்கு பணம் வழங்க ‘அக்னிபத்’ திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி, பாதுகாப்புப் படையினரின் பயிற்சி மற்றும் ஓய்வூதியத்துக்கு செலவிடப்படக் கூடாது என்று மத்திய அரசு விரும்புகிறது. அந்த நிதி தொழிலதிபா்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு கருதுகிறது. முன்னா் ராணுவத்துக்கான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை அரசுக்குச் சொந்தமான ஆயுதத் தயாரிப்புத் தொழிற்சாலைகள் தயாரித்தன. ராணுவ விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்தது. தற்போது அந்த நிறுவனம் ஓரங்கட்டப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக விமானங்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை தொழிலதிபா் அதானி உற்பத்தி செய்வாா். விவசாயிகள் கோரிக்கையை ஏற்க மறுப்பு: பத்து முதல் பதினைந்து தொழிலதிபா்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், பயிா்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு மறுக்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்கப்படும். இந்த உத்தரவாதம் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையிலும் இடம்பெறும் என்றாா்.
தொடர்புடையது

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க முயற்சி: மத்திய அரசு மீது ராகுல் சாடல்

விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000! வேளாண் கடன் தள்ளுபடி!

ரூ.5 லட்சம் கோடி கடன் குறித்து திமுக அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்! - பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்

அடுத்த நிதியாண்டில் ரூ.8.20 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு திட்டம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


