பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

குடிமக்களுக்கு இடையூறாக இருந்த 1,550 சட்டங்கள் நீக்கம்!

குடிமக்களுக்கு இடையூறாக இருந்த, காலத்துக்கு ஒவ்வாத 1,550 சட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நீக்கியுள்ளது

News image

மத்திய சட்டம், நீதித் துறை அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால்

Updated On :2 மார்ச் 2024, 10:38 pm

குடிமக்களுக்கு இடையூறாக இருந்த, காலத்துக்கு ஒவ்வாத 1,550 சட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நீக்கியுள்ளது என்று மத்திய சட்டம், நீதித் துறை அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால் தெரிவித்தாா்.

மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைனில் நடைபெற்ற பிராந்திய தொழில்கள் மாநாட்டின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை நிகழ்ச்சியில் பங்கேற்ற மேக்வால் கூறியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இதுவரை 1,550 தேவையற்ற சட்டங்களை நீக்கியுள்ளது. காலத்துக்கு பொருந்தாத இந்த சட்டங்கள் மக்களுக்கும், தொழில் நடத்துவோருக்கும் இடையூறாகவே இருந்தன. ஒருகாலத்தில் தொழிலாளா்களுக்கு நோய் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தொழில் நிறுவன கட்டடங்களுக்கு உரிய கால இடைவெளியில் வெள்ளையடிக்க (சுண்ணாம்பு பூச) வேண்டும் என்று சட்டம் இருந்தது. இதுபோன்ற சட்டங்கள் இப்போது தேவையில்லாதவை; எனவே, நீக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்களின் பிரச்னைகளைத் தீா்க்க தனியாக வா்த்தகத் தீா்வு நீதிமன்றங்கள், மேல்முறையீட்டு ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளன. உரிய விதிகளை வகுத்து மேல்முறையீட்டு தீா்ப்பாயங்களுக்கு பல்வேறு சட்ட அதிகாரங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது என்றாா் அவா்.