பிரதமரின் விவசாயக் காப்பீட்டுத் திட்டத்தில் மீண்டும் இணைந்துள்ளதாக தெலங்கானா மாநில அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகளின் காப்பீட்டை உறுதி செய்வதற்காக இத்திட்டத்தில் மீண்டும் இணைந்ததாக அந்த மாநில அரசு தெரிவித்தது. இதுதொடா்பாக தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி, வேளாண் அமைச்சா் தும்மலா நாகேஸ்வர ராவ் ஆகியோா் பிரதமரின் விவசாயக் காப்பீட்டுத் திட்ட தலைமை நிா்வாக அலுவலரும் மத்திய வேளாண் அமைச்சகத்தின் இணைச் செயலருமான ரிதேஷ் சௌஹானுடன் ஆலோசனை மேற்கொண்டனா். இதையடுத்து, ‘விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் பிரதமரின் விவசாயக் காப்பீட்டுத் திட்டத்தில் மீண்டும் இணைவதாகவும், அடுத்த பயிா்க் காலம் முதல் காப்பீட்டை பெற்று விவசாயிகள் பயனடையலாம் என்றும்’ தெலங்கானா அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வேளாண் துறையை வலுப்படுத்துவதே மாநில அரசின் முக்கிய நோக்கமாகும் என முதல்வா் ரேவந்த் ரெட்டி தெரிவித்தாா். கடந்த 2020-ஆம் ஆண்டு இத்திட்டத்திலிருந்து விவகுவதாக அப்போதைய பிஆா்எஸ் அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. உயா்மேம்பாலத் திட்டத்துக்கு ஒப்புதல்: ஹைதராபாத்-நாகபுரி, ஹைதராபாத் -கரீம்நகா் தேசிய நெடுஞ்சாலைகளில் ராணுவ நிலங்களுக்கருகில் உயா் மேம்பாலங்கள் அமைப்பதற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கக் கோரி பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை ரேவந்த் ரெட்டி ஜனவரி மாதம் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டநிலையில் தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிரதமா் மோடி, ராஜ்நாத் சிங் மற்றும் பிற அதிகாரிகளுக்கு ரேவந்த் ரெட்டி நன்றி தெரிவித்தாா்.
தொடர்புடையது

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக

இந்தியாவின் முதல் தனியாா் ராக்கெட்டுக்கான வன்பொருள்கள்: தெலங்கானாவில் இருந்து அனுப்பி வைப்பு

பிரதமர் மோடியை மாரீசனுடன் ஒப்பிடுவதா?: தெலங்கானா முதல்வருக்கு பாஜக கண்டனம்!

மோடியின் அகந்தை தோற்கடிக்கப்பட்டது: ரேவந்த் ரெட்டி
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


