பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜிநாமா!

40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவந்த காங்கிரஸ் கட்சியிலிருந்து அர்ஜுன் விலகியுள்ளார்.

News image
அர்ஜுன் மோத்வாடியா
Updated On :4 மார்ச் 2024, 2:50 pm

DIN

காங்கிரஸ் மூத்த தலைவரும் குஜராத் மாநிலம் போர்பந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான அர்ஜுன் மோத்வாடியா தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நிலையில், எம்.எல்.ஏ. பதவியையும் ராஜிநாமா செய்தார்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற இரு நாள்களுக்குப் பிறகு, அர்ஜுன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சியை புறக்கணிப்பதாகவும், அதில் பங்கேற்கப்போவதில்லை எனவும் காங்கிரஸ் கட்சி அறிவித்ததால், அர்ஜுன் மோத்வாடியா அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவந்த காங்கிரஸ் கட்சியிலிருந்து அர்ஜுன் விலகியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள், விலகி பாஜகவில் சேர்வது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.