மாதிரி படம்
மாதிரி படம்

இருசக்கர வாகன டாக்ஸி சேவையைத் திரும்ப பெறும் கர்நாடகா: என்ன காரணம்?

மின் டாக்ஸி திட்டம் ரத்து: பாதுகாப்பு, சட்ட மீறல்கள் காரணம்

மின் இருசக்கர வாகன டாக்ஸி சேவையை மாநிலத்தில் தடை செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இது பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக உள்ளதாகவும் மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பானதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்தது.

2021-ல் கொண்டு வரப்பட்ட கர்நாடக மின் இருசக்கர வாகன டாக்ஸி சேவையைத் திரும்ப பெறுவதாக அரசு தற்போது அறிவித்துள்ளது.

இது குறித்து, “தனியார் செயலிகள் மோட்டார் வாகன சட்டத்தையும் அதன் விதிகளையும் மீறுவதாகவும் சட்டத்திற்கு புறம்பான போக்குவரத்து மேற்கொள்ளப்படுவதாகவும் எங்களின் கவனத்துக்கு வந்தது” என அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் இடையேயும் மற்ற டாக்ஸி சேவை ஓட்டுநர்கள் இருசக்கர டாக்ஸி ஓட்டுநர்கள் இடையேயும் அடிக்கடி மோதல்கள் ஏற்படுவதாக பதிவாகியுள்ளது.

மேலும், போக்குவரத்து துறைக்கு வரி வசூலிப்பதில் சிக்கல் நிலவுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட ஒழுங்கு மற்றும் விதிகளை காக்கவும் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டும் இந்த திட்டத்தை ரத்து செய்வதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

தனியார் செயலிகளின் டாக்ஸி ஓட்டுநர்கள் கூட்டமைப்பு, அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ளது.

ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் என தெரிவித்தும் 2021-ல் பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் தற்போது நீக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாக கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com