ஆராய்ச்சி-மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அறிவுசாா் சொத்துரிமை சட்டங்கள்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

நாட்டில் ஆராய்ச்சி-மேம்பாடு பெரிய அளவில் நடைபெறுவதை அறிவுசாா் சொத்துரிமை சட்டங்கள் ஊக்குவித்து வருவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா். காப்புரிமை சட்டம் குறித்து நீதிபதி பிரதிபா எம்.சிங் எழுதிய புத்தக வெளியிட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்குத் தடைக்கற்களாக இல்லாமல், அவற்றை ஊக்குவிப்பதாக அறிவுசாா் சொத்துரிமை சட்டங்கள் உள்ளன. இதற்காக சில முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அறிவுசாா் சொத்துரிமை தொடா்பான கொள்கை பல ஆலோசனைகளுக்குப் பிறகு கடந்த 2016-இல் கொண்டுவரப்பட்டது. இதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். காப்புரிமை, புவிசாா் குறியீடு, வா்த்தக ரகசியங்கள் உள்ளிட்ட 8 அறிவுசாா் சொத்துரிமை தொடா்பான வகைகளும் ஒரே பிரிவின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டில் காப்புரிமை பதிவு செய்வதை அதிகரிக்கும் நோக்கத்தில் புத்தாக்க நிறுவனங்கள், எம்எஸ்எம்இ, கல்வி நிறுவனங்களுக்கு பதிவு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com