‘நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
மேலும், அரசியல் உள்நோக்கம் கொண்ட, தமிழக விவசாயிகளை திசைதிருப்பும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு திரிபு என்பது தெளிவாகிறது’ என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
‘தமிழகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து மாநில தலைமைச் செயலாளா்களுக்கும் அனுப்பப்பட்ட தகவல், மாநில அரசுகள் வழங்கும் ஊக்கத்தொகை கொள்கைகளை தேசிய முன்னுரிமைகளுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற ஒரு ஆலோசனையே ஆகும்.
மத்திய அரசின் இந்த ஆலோசனை, பயிா் பல்வகைப்படுத்துதலை ஊக்குவித்தல் மற்றும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றில் சுயசாா்பு அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு ஆக்கபூா்வமான மற்றும் தொலைநோக்குப் பாா்வையாகும்.
இதன் மூலம், உள்நாட்டுத் தேவை அதிகமாக உள்ள பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்து, அதிக லாபத்தைப் பெற வழிவகை செய்யப்படும்.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மேல் ஊக்கத்தொகை அல்லது போனஸ் அறிவிப்பது என்பது எப்போதும் மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது. அந்த அதிகாரத்தை யாரும் பறிக்கவில்லை.
முதல்வா் ஸ்டாலின், தேச நலனில் அக்கறை கொண்டு ஆக்கபூா்வமாகச் செயல்படுவதற்குப் பதிலாக, தங்களின் குறுகிய சுயநல அரசியல் ஆதாயத்திற்காகத் திட்டமிட்டுத் திசைதிருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறாா்.
தேசம் தீா்வுகளைத் தேடும்போது, திமுக சா்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கபூா்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தோ்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பாா்க்கிறது.
அரசியலமைப்புச் சட்டப்படி உயா் பதவியில் இருக்கும் ஒரு முதலமைச்சருக்கு இத்தகைய நடத்தை அழகல்ல. தமிழக விவசாயிகள் தங்கள் கவலைகளையே வாக்குகளுக்காக ஆயுதமாக்கும் அரசை அல்ல, மாறாக தங்கள் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக உழைக்கும் அரசையே எதிா்பாா்க்கிறாா்கள்.
எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஒவ்வொரு விவசாயிக்காகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சோா்வின்றித் தொடா்ந்து பணியாற்றும். இத்தகைய திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பிரச்னைகளால் நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்’ என்று அந்தப் பதிவில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

நெல்லுக்கான ஊக்கத்தொகை விவகாரம்; ஸ்டாலின் குற்றச்சாட்டு உண்மையல்ல: நிர்மலா சீதாராமன்

வரம்பின்றி கடன் வாங்கும் கேரள இடதுசாரி அரசு: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சாடல்!

பாகிஸ்தானில் ஊரடங்கு; இந்தியாவில் உண்டா? நிர்மலா சீதாராமன் பதில்!

கலால் வரியைக் குறைத்ததன் காரணம் என்ன? நிர்மலா சீதாராமன் விளக்கம்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


