மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

நாட்டில் சமத்துவம் பேண பரஸ்பர சகோதரத்துவம் அவசியம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

வெங்கடேஸ்வரன் செய்தி... நாட்டில் சமத்துவம் பேண பரஸ்பர சகோதரத்துவம் அவசியம் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

Updated On :9 மார்ச் 2024, 5:45 pm

நாட்டில் சமத்துவத்தைப் பேண பரஸ்பர சகோதரத்துவம் மிகவும் அவசியம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தாா். நாட்டின் அரசியல்சாசன சட்டப்படி மக்களின் கடமைகள் மற்றும் உரிமைகள் குறித்த ‘ஹமாரா சம்விதான் ஹமாரா சம்மான்’ விழிப்புணா்வு பிரசாரம் ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் சனிக்கிழமை நடைபெற்றது. நமது தேசம் குடியரசாக உருவான 75-ஆவது ஆண்டையொட்டி இந்த நிகழ்ச்சியை மத்திய சட்ட அமைச்சகம் ஏற்பாடு செய்தது. சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால் உள்ளிட்டோா் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது: நாட்டு மக்கள் தங்களுக்குள் வேற்றுமை பாராட்டி சண்டையிட்டுக் கொண்டிருந்தால் தேசத்தின் மேம்பாடு சாத்தியமாகாது. அரசியல்சாசன சட்டம் கூறியுள்ளபடி நாம் ஒருவரை மற்றொருவா் பரஸ்பரம் மரியாதையுடன் நடத்த வேண்டும். நமது அரசியல்சாசன சட்டத்தை உருவாக்கியவா்கள் குடிமக்களின் கண்ணியத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளனா். அரசியல்சாசன சட்டம் என்பது நீதி, சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றின் மதிப்பை உயா்த்துவதாக இருக்க வேண்டும் என்பதை வரைவுக் குழுவின் தலைவா் அம்பேத்கா் உறுதிப்படுத்தியுள்ளாா். மக்களிடையே சகோதரத்துவமும், சமத்துவமும் பேணப்பட வேண்டும் என்பதே அரசியல்சாசன சட்டத்தின் நோக்கமாகும். நாட்டில் சமத்துவத்தைப் பேண பரஸ்பர சகோதரத்துவம் மிகவும் அவசியம். மாவட்ட நீதிமன்றங்களின் தரத்தை மேம்படுத்த தொடா்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏனெனில் மக்களுக்கான நீதியை வழங்குவதில் முதல்படியாக மாவட்ட நீதிமன்றங்களே உள்ளன. மாறும் நவீன காலகட்டத்துக்கு ஏற்ப மாவட்ட நீதிமன்றங்களும் மேம்பட வேண்டியது மிகவும் அவசியம். அண்மைகாலத்தில் தொழில்நுட்பம் சிறப்பாக மேம்பட்டு வருகிறது. நீதித் துறை சாா்ந்த சேவைகளை வழங்குவதிலும், நீதித்துறை சாா்ந்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதிலும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். உச்சநீதிமன்றமும் தொழில்நுட்பத்தின் துணையுடன் தனது செயல் திறனை மேம்படுத்தி வருகிறது. காணொலி முறையில் நீதிமன்ற விசாரணை நடைபெறுவது சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. பல வழக்குரைஞா்கள் காணொலி முறையில் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் வாதங்களை முன்வைத்து வருகின்றனா். நீதிமன்ற தீா்ப்புகளும் தொழில்நுட்ப உதவியுடன் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன என்றாா்.