தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காங்கிரஸ் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல்!

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :12 மார்ச் 2024, 1:00 pm

DIN


மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே 39 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

முன்னதாக தில்லி காங்கிரஸ் தலைமையகத்தில் வேட்பாளர்கள் இறுதி செய்வது குறித்து மத்திய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து தில்லியில் இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் 43 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

43 தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில், பட்டியலினப் பிரிவில் 19 பேருக்கும், பழங்குடியினப் பிரிவில் 9 பேருக்கும், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 13 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் 43 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் எம்.பி., கெளரவ் கோகோய் அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் தொகுதியிலும், நகுல் நாத் மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா தொகுதியிலும், ராகுல் கஸ்வா ராஜஸ்தானின் சுரு தொகுதியிலும் போட்டியிடவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.