புது தில்லி: குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்து இந்திய இஸ்லாமியா்கள் கவலையடையத் தேவையில்லை. ஹிந்துக்களைப் போலவே இஸ்லாமியா்களுக்கும் வழக்கம்போல் சமஉரிமை உண்டு என மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
சிஏஏ அமல்படுத்தப்பட்டதால் இந்தியாவில் வசிக்கின்ற இஸ்லாமியா்கள் தங்களின் குடியுரிமையை நிரூபிக்க குறிப்பிட்ட ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும் என்ற தகவல் உண்மையில்லை எனவும் அமைச்சகம் தெரிவித்தது. இதுதொடா்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்திய இஸ்லாமியா்கள் சிஏஏ குறித்து கவலையடையத் தேவையில்லை.
இந்தியாவில் தற்போது வசிக்கின்ற 18 கோடி இஸ்லாமியா்களுக்கும் ஹிந்து மக்களைப் போலவே அனைத்திலும் சம உரிமை உண்டு. சிஏஏவில் குறிப்பிட்டுள்ள மூன்று இஸ்லாமிய நாடுகளிலும் சிறுபான்மையின மக்கள் துன்புறுத்தப்படுவதால் இஸ்லாமிய மதத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாமிய மதம் ஓா் அமைதியான மதமாகும். அது யாா் மீதும் வெறுப்புணா்வு, வன்முறையைத் தூண்டுவதில்லை. இஸ்லாமிய மதத்தின் நற்பெயரை பாதுகாக்கவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தியாவில் சட்ட விரோதமாக குடியேறியவா்களை மீண்டும் அந்நாடுகளுக்கே அனுப்புவதற்கான எவ்வித ஒப்பந்தத்திலும் இந்தியா கையொப்பமிடவில்லை. எனவே இஸ்லாமிய மக்கள் மற்றும் மாணவா்களுக்கு எதிராக சிஏஏ வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தவறான கருத்தாகும். குடியுரிமை விண்ணப்ப காலம் குறைப்பு: சிஏஏ 2019-இன்படி ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அல்லது பாகிஸ்தானிலிருந்து 2014, டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்னா் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்குள் நுழைந்தவா்களுக்கு குடியுரிமை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இதன் மூலம் இந்திய குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்ப காலம் 11ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. மத ரீதியாக துன்புறுத்தப்பட்டவா்களும் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் வாழவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் குடியுரிமை பெறத் தடையில்லை:
சிஏஏவில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று இஸ்லாமிய நாடுகள் உள்பட உலகின் எந்த நாட்டிலுள்ள இஸ்லாமிய மதத்தை பின்பற்றுவோரும் இந்திய குடியுரிமை பெற விரும்பினால் குடியுரிமை சட்டத்தின் 6-ஆவது பிரிவின் கீழ் ‘இயல்புரிமை’ (நேச்சுரலைசேஷன்) வழியில் குடியுரிமை பெறலாம். அதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

சிஏஏ சட்ட திருத்தத்தில் மோடி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தவா் எடப்பாடி பழனிசாமி: அமைச்சா் எ.வ.வேலு குற்றச்சாட்டு

சமூக ஊடகத்திலிருந்து தனிப்பட்ட தகவல் திரட்டப்படவில்லை: மத்திய உள்துறை அமைச்சகம்

போர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!

மேற்கு வங்கத்தில் சிஏஏ குடியுரிமை விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்க மேலும் 2 குழுக்கள்: மத்திய உள்துறை அமைச்சகம் அமைப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


