
பாட்னா சிவில் நீதிமன்ற வளாகத்தின் உட்புறம் உள்ள மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) புதன்கிழமை வெடித்ததில் ஒருவர் பலி மற்றும் நான்கு பேர் காயமுற்றனர்.
தேவேந்திர பிரசாத் என்கிற வழக்குரைஞர் இந்த விபத்தில் பலியானார். பாட்னா காவலர்கள் இதனை உறுதி செய்தனர்.
காயம்பட்ட நான்கு பேரும் வழக்குரைஞர்கள். நீதிமன்ற அலுவலில் அவர்கள் ஈடுபட்டிருந்தபோது மின்மாற்றி கம்பத்தில் ஏற்பட்ட குறைந்த மின்னழுத்தத்தால் வெடி விபத்து நிகழ்ந்தது.
காயம்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த விபத்தை தொடர்ந்து நீதிமன்ற நிர்வாகத்துக்கு எதிராக வழக்குரைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.