மாதிரி படம்
மாதிரி படம்IANS

வெறி நாய்க்கடியால் 17 பேர் காயம்!

பாரமுல்லாவில் வெறிநாய் அட்டகாசம்: மூன்று கிராமங்கள் பதற்றம்
Published on

ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் வெறி நாய் ஒன்று, 3 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உள்பட 17 பேரைக் கடித்துள்ளது.

பாரமுல்லா மாவட்டத்தில் ஃபதேகர், சீரி மற்றும் ஹீவன் ஆகிய கிராமங்களில் இந்த நாயை எதிர்கொண்டவர்கள் காயமுற்றுள்ளனர்.

இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர பயப்பட்டுள்ளனர். குழந்தைகளை வெளியே அனுப்புவதில்லை.

காயம்பட்டவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு அவர்கள் பாரமுல்லா மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வெறி நாய் உலாவுவதைக் குறித்து காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாய் பிடிக்கப்பட்டதாக என்பது குறித்த விவரங்கள் இல்லை.

X
Dinamani
www.dinamani.com