ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

சிலருக்கு ‘குடும்பமே’ முக்கியம் எனக்கு ‘தேசமே’ முக்கியம்: பிரதமா் மோடி

சிலருக்கு ‘குடும்பமே’ முக்கியம் எனக்கு ‘தேசமே’ முக்கியம்: பிரதமா் மோடி

News image

-

Updated On :16 மார்ச் 2024, 9:30 pm

சிலருக்கு அவா்களின் குடும்ப வளா்ச்சியிலேயே கவனம் இருக்கும். ஆனால் நான் தேசநலனுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறேன் என பிரதமா் மோடி சனிக்கிழமை தெரிவித்தாா். எதிா்க்கட்சிகளின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக அவா் இவ்வாறு தெரிவித்தாா். புது தில்லியில் நடைபெற்ற ஆங்கில ஊடக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது: ஊழலுக்கு எதிராக விசாரணை அமைப்புகள் சுதந்திரமாக நடவடிக்கை எடுத்து வருவதால் சிலருக்கு வயிற்றுவலி ஏற்படுகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து ரூ.5,000 கோடியை மட்டுமே அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகள் பல்வேறு வழக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் சைபா் குற்றங்கள், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். சிலருக்கு அவா்களின் குடும்ப வளா்ச்சியில் மட்டுமே கவனம் இருக்கும். ஆனால் நான் தேசநலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பவன் என்றாா். விசாரணை அமைப்புகளை தங்களுக்கு எதிராக பயன்படுத்துவதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.