கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாக்கு மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
''2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பெருந்திரளான வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதிசெய்யுமாறு கேரள மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
சாதனை அளவிலான வாக்குப்பதிவு, கேரளத்தின் ஜனநாயக உணர்விற்கு புத்துணர்ச்சி அளிக்கும். குறிப்பாக, மாநிலத்தின் இளைஞர்களும் பெண்களும் முன்வந்து வாக்களிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்'' என பிரதமர் பதிவிட்டுள்ளார்.
கேரளத்தில் 140 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 883 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2.71 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 30,471 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
திருவனந்தபுரம், மூடவன்முகலில் உள்ள வாக்குச்சாவடிக்கு, நேமம் தொகுதியின் அமைச்சரும் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளருமான வி. சிவன்குட்டி, நடிகர் மோகன் லால் ஆகியோர் வாக்கு செலுத்தினர்.
Summary
keralam election 2026 Votes of Kerala's Youth and Women Are Important: Prime Minister Modi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாதிப் பெயர் சர்ச்சை! மீண்டும் முழுப் பெயர் கூறி எம்எல்ஏவாக பதவியேற்ற கேரள முதல்வர்!

கேரளத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்! காங்கிரஸ் 28.79%

கேரளத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது! காங்கிரஸ் 63, சிபிஎம் 26 இடங்களில் வெற்றி!

கேரளத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் காங்கிரஸ்!
விடியோக்கள்
DMK Vs TVK | முன்னாள் முதல்வருக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன்! | MKStalin

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!




