180 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஏர் இந்தியா நிறுவனம்!

விமான போக்குவரத்து நிறுவமான ஏர் இந்தியா 180 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. இது நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 1 சதவிகிதம் என தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம்
ஏர் இந்தியா நிறுவனம்

விமான போக்குவரத்து நிறுவமான ஏர் இந்தியா 180 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. இது நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 1 சதவிகிதம் என தெரிவித்துள்ளது.

அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை கடந்த 2022 இல் டாடா நிறுவனம் கையகப்படுத்தியது. அது முதல் செலுவுகள் குறைப்பு, விருப்ப ஓய்வு திட்டம், ஊழியர்கள் பணிநீக்கம் என பல்வேறு மாற்றங்களை செயல்படுத்தி வருகிறது.

ஏர் இந்தியா நிறுவனம்
மோடியை வீழ்த்துவதிலேயே ராகுலின் வெற்றி உள்ளது: மும்பையில் மு.க. ஸ்டாலின் உரை

இந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி தனது 53 ஊழியர்களை பணி நீக்கம் செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்த ஏர் இந்தியா நிறுவனம், தற்போது திடீரென 180 ஊழியர்களை பணிநீக்கம் செய்து அறிவித்துள்ளது.

இந்த ஊழியர்கள் அனைவரும் விமானத்தில் பறக்காத பணியைச் செய்யக்கூடிய உணவகம், சுகாதாரம் மற்றும் குளிர்சாதன சேவை போன்றவற்றில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் ஊழியர்கள் பணிநீக்கம் தொழிற்சங்கங்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com