மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மல்லிகார்ஜுன கார்கேவை கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார்: கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார்

கார்கே மீதான அச்சம் - பிரதமர் மோடியை சீண்டும் சிவகுமார்

News image
Updated On :17 மார்ச் 2024, 12:27 pm

DIN

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கண்டு பிரதமர் மோடி அஞ்சுவதாக கார்நாட துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார். எனவேதான், கார்கேவின் சொந்த மாவட்டமான கலபுர்கியில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

கலபுர்கி உட்பட 20 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

மக்களவைத் தேர்தலுக்கான அடுத்த வேட்பாளர் பட்டியல் மார்ச் 20ஆம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். கர்நாடக மாநிலம் கலபுர்கியில் இருந்து மோடி தனது தேர்தல் பிரசாரத்தை சனிக்கிழமை தொடங்கினார். மாநிலத்தில் அவரது அடுத்த பிரசாரம் சிவமொக்காவில் மாா்ச் 18ஆம் நடக்கிறது.

2019 ஆம் ஆண்டில் 28 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் ஒரு இடத்தை மட்டுமே வென்றது. அதே நேரத்தில் பாஜக 25 இடங்களை கைப்பற்றியது. சுயேச்சை ஒரு இடத்தில் பாஜக ஆதரவுடன் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.