எஸ்பிஐ-யின் நடவடிக்கையில் திருப்தியில்லை: உச்ச நீதிமன்றம்

எஸ்பிஐ-யின் நடவடிக்கையில் திருப்தியில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

புது தில்லி: தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விவகாரத்தில் எஸ்பிஐ-யின் நடவடிக்கையில் திருப்தியில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

தேர்தல் நன்கொடை பத்திர திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும் இப்பத்திரங்கள் விநியோகம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பிக்கவும், அதனை தேர்தல் ஆணையம், தனது வலைதளத்தில் மார்ச் 15ஆம் தேதிக்குள் வெளியிடவும் மார்ச் 11ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

எஸ்பிஐ வெளியிட்ட தேர்தல் நன்கொடை பத்திர விவரத்தில் பத்திர வரிசை எண் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில், தேர்தல் பத்திர வழக்கு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி ஜே.பி.பார்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது

அப்போது, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான எஸ்பிஐ நடவடிக்கை திருப்தியளிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.

இதற்கு பதிலளித்த எஸ்பிஐ வங்கி தரப்பு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை நாங்கள் புரிந்துகொண்டதன் அடிப்படையிலேயே தரவுகள் அளிக்கப்பட்டுள்ளது என்று வாதம் முன் வைக்கப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், அனைத்து தரவுகளையும் வெளியிட வேண்டும் என்று முதல் உத்தரவிலேயே தெளிவாக கூறப்பட்டுள்ளது. அனைத்து தரவுகளையும் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டும் எஸ்பிஐ ஏன் தேர்தல் பத்திர வரிசை எண்களை வெயிடவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்போதும், தேர்தல் பத்திர விவரங்களை முழுமையாக வெளியிடாடது ஏன்? தேர்தல் பத்திர பிரத்யேக(வரிசை) எண்களை வெளிடாதது ஏன்? தேர்தல் பத்திரங்கள் எந்த தேதியில் வழங்கப்பட்டது?, யாரால் வழங்கப்பட்டது?, யாரால் பணமாக்கப்பட்டது? என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com