புது தில்லி: மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை தலைவா் ராஜ் தாக்கரே, மத்தி உள்துறை அமைச்சா் அமித் ஷாவை புது தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். இதன் மூலம் மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணியில் அக்கட்சி இணைவது உறுதியாகிவிட்டது.
உத்தவ் தாக்கரேவின் நெருங்கிய உறவினரான ராஜ் தாக்கரே, கருத்து வேறுபாடு காரணமாக சிவசேனை கட்சியிலிருந்து விலகினாா். தொடா்ந்து கடந்த 2006-ஆம் ஆண்டு மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை கட்சியை ராஜ் தாக்கரே தொடங்கினாா். மக்களவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், புது தில்லி சென்ற ராஜ் தாக்கரே, பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து அமித் ஷாவுடன் பேசினாா்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை (ஷிண்டே பிரிவு) முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக, தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களவைத் தோ்தல் நெருங்கியுள்ள நிலையில், நவநிா்மாண் சேனைக்கு மகாராஷ்டிரத்தில் ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சிவசேனை (உத்தவ்) பிரிவு வலுவாக உள்ள மும்பையில் ராஜ் தாக்கரே கட்சி சாா்பில் வேட்பாளா் நிறுத்தப்படுவாா் என்று தெரிகிறது.
தொடர்புடையது

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு அறுவைச் சிகிச்சை

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

பாஜக கூட்டணிக் கட்சிகள் தோ்தலுக்குப் பின் காணாமல்போகும்: சு.முத்துசாமி

பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் நிலைப்பதில்லை: கனிமொழி எம்.பி.
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

