இராக், சிலி நாடுகளுக்கு இந்திய தூதா்கள் நியமனம்

புது தில்லி: இராக், சிலி ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதா்கள் நியமனம் குறித்த அறிவிப்பை வெளியுறவுத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது. 1993-ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்) அதிகாரியான செளமெந்து பாக்சி, இராக்குக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

தில்லியில் உள்ள உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலின் துணை இயக்குநராக உள்ள செளமெந்து பாக்சி, புதிய பொறுப்பை விரைவில் ஏற்பாா் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலராக உள்ள அபிலாஷா ஜோஷி, சிலி குடியரசுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளாா். அபிலாஷா ஜோஷி ஐஎஃப்எஸ்-இன் 1995-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்தவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com