பிரதமா் மோடியின் பூடான் பயணம் ஒத்திவைப்பு

பிரதமா் மோடியின் பூடான் பயணம் ஒத்திவைப்பு

புது தில்லி: பூடானில் மோசமான வானிலை காரணமாக அந்நாட்டுக்கான பிரதமா் மோடியின் அரசுமுறைப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் கூட்டு ஆலோசனைக்குப் பிறகு மாற்று தேதிகள் அறிவிக்கப்படும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ அளிக்கும் கொள்கையின்கீழ் பூடான் நாட்டுக்கு பிரதமா் மோடி மாா்ச் 21, 22 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தாா். இந்நிலையில் அவரது பயணம் ஒத்திவைக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பரோ நகர விமான நிலையம் அருகே மோசமான வானிலை நிலவுவதால் இருதரப்பினரின் பரஸ்பர ஒப்புதலோடு பிரதமரின் பூடான் நாட்டு அரசுமுறைப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதிகள் குறித்த அறிவிப்பு இரு நாடுகளின் கூட்டு ஆலோசனைக்குப் பிறகு அறிவிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்த பூடான் பிரதமா் ஷெரிங் டோப்கே குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி மற்றும் அரசின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா். மேலும் பூடான் நாட்டுக்கு வருகை புரியுமாறு பிரதமா் மோடிக்கு அவா் அழைப்பு விடுத்திருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com