ஏர் இந்தியாவுக்கு ரூ.80 லட்சம் அபராதம்.. ஏன்?

விதிமீறலுக்கான விலை: ஏர் இந்தியாவுக்கு ரூ.80 லட்சம் அபராதம்
ஏர் இந்தியா
ஏர் இந்தியா

விமான பணி நேர வரையறைகள் தொடர்பான விதிகளை மீறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.80 லட்சம் அபராதம் விதித்துள்ளது, விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ).

விமானிகள் பணியாற்றும் நேரம் தொடர்பாக திருத்தப்பட்ட நேர அட்டவணையை சமர்பிக்க விமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடுவை நீட்டிக்க இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு இருமுறை கோரிக்கை வைத்தது.

அதனை மறுத்துள்ள இயக்குநரகம், ஏப்ரல் 15-க்குள் பணி நேர மாற்று திட்டங்களை இயக்குநரகத்தில் சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

விமானிகளுக்கு கூடுதல் ஓய்வு நேரம் அளித்தல் உள்ளிட்ட புதிய விதிமுறைகள் ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

விமான நிறுவனங்களின் கூட்டமைப்புக்கு டிஜிசிஏ அனுப்பியுள்ள கடித்தத்தில், ஜூன் 1 முதல் புதிய விதிமுறைகளை அமலுக்கு கொண்டுவர விமான நிறுவனங்களுக்கு திட்டவட்டமாக அறிவுறுத்த கேட்டுக்கொண்டுள்ளது.

ஏர் இந்தியா
விமான ஊழியா்களின் பணி நேரங்களில் மாற்றம்: டிஜிசிஏ பரிந்துரை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com