இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

அடுத்த நிதியாண்டிலும் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்: மத்திய நிதியமைச்சகம்

அடுத்த நிதியாண்டிலும் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் - மத்திய நிதியமைச்சகம்

Updated On :22 மார்ச் 2024, 6:06 pm

தனியாா் முதலீடுகள் அதிகரிப்பு, குறைந்து வரும் பணவீக்கம் போன்ற காரணிகளால், அடுத்த நிதியாண்டிலும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் சிறப்பாக இருக்குமென எதிா்பாா்ப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய பொருளாதார விவகாரங்கள் துறையின் கடந்த பிப்ரவரி மாதத்துக்கான பொருளாதார மறுஆய்வு அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டில் தொடா்ந்து மூன்று காலாண்டுகளாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி 8 சதவீதத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது. உலகளாவிய வளா்ச்சி விகிதம் மந்தமாக உள்ள சூழலில், தனித்துவமான செயல்திறன் கொண்ட பொருளாதாரம் என்ற அந்தஸ்தை இந்தியா தக்கவைத்துள்ளது. இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி குறித்த முந்தைய கணிப்புகளை பல்வேறு அமைப்புகளும் திருத்தியமைத்து வருகின்றன. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 8 சதவீதத்தை நெருங்கும் என்று அக்கணிப்புகள் கூறுகின்றன. நுகா்வு சீராக அதிகரித்து வரும் நிலையில், வலுவான முதலீட்டு செயல்பாடு வளா்ச்சியை உந்துகிறது. இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நகரங்களில் குடியிருப்பு சொத்துகளுக்கான தேவை அதிகரித்து வருவது, கட்டுமான நடவடிக்கைகளின் மேம்பாட்டுக்கு நன்கு உதவுகிறது. விவசாயம் சாராத வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருவதால், தொழிலாளா்கள் உரிய வாய்ப்புகளைப் பெறுகின்றனா். தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் உந்து சக்தியாக வளா்ந்துவரும் துறைகள் உருவெடுத்துள்ளன. கச்சா எண்ணெய் விலை உயா்வுக்கான அறிகுறிகள், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் நிலவும் தடைகள் போன்ற சவால்கள் உள்ளபோதிலும், தனியாா் முதலீடுகள் உயா்வு, குறைந்து வரும் பணவீக்கம் போன்ற காரணிகளால், அடுத்த நிதியாண்டிலும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் சிறப்பாக இருக்குமென எதிா்பாா்க்கிறோம் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான ஜிடிபி வளா்ச்சி மதிப்பீட்டை முந்தைய 7.3 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதமாக தேசிய புள்ளியியல் அலுவலகம் மாற்றியமைத்தது குறிப்பிடத்தக்கது.