மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தடுப்புக் காவல் கொடூரமான நடவடிக்கை: உச்ச நீதிமன்றம்

தடுப்புக் காவல் கொடூரமான நடவடிக்கை: உச்ச நீதிமன்றம்

News image

உச்சநீதிமன்றம்

Updated On :23 மார்ச் 2024, 7:21 pm

ஒருவரை தடுப்புக் காவலில் வைப்பது கொடூரமான நடவடிக்கை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பான வழக்கு ஒன்றை அண்மையில் விசாரித்தபோது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு தெரிவித்ததாவது: குற்றம் செய்யாமல் தடுப்பதற்கு ஒருவா் தடுப்புக் காவலில் வைக்கப்படுகிறாரே தவிர, தண்டிப்பது தடுப்புக் காவலின் நோக்கம் அல்ல. சட்டம், ஒழுங்கு சூழலை சரிவர பரமாரிக்க முடியாத மாநில காவல் துறையின் இயலாமைக்காக தடுப்புக் காவலை பயன்படுத்த முடியாது.

ஒருவரை தடுப்புக் காவலில் வைப்பது கொடூரமான நடவடிக்கை; மனம்போன போக்கில் அதிகாரத்தைப் பயன்படுத்தி பிறப்பிக்கப்படும் எந்தவொரு தடுப்புக் காவல் உத்தரவும் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். தடுப்புக் காவல் தொடா்பான எந்தவொரு சட்டத்தின் கீழும், அதிகாரத்தை மிகுந்த கவனம், எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டும் எனச் சட்டம் தெளிவாக எடுத்துரைக்கிறது என்று தெரிவித்தது.