ஒடிஸா மாநில கட்டாக் தொகுதியின் 6 முறை எம்.பி.யாக இருந்த பா்த்ருஹரி மஹ்தாப் (67) வியாழக்கிழமை பாஜகவில் இணைந்தாா். மாநிலத்தில் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளத்தின் நிறுவன உறுப்பினரான மஹ்தாப், கடந்த வெள்ளிக்கிழமை கட்சியிலிருந்து விலகினாா். இந்நிலையில், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் கட்சியின் மூத்த தலைவா்கள் முன்னிலையில் மஹ்தாப் பாஜகவில் இணைந்தாா். மக்களவைத் தோ்தலையொட்டி மஹ்தாப் பாஜகவில் இணைந்தது, பிஜேடிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மஹ்தாப், ‘பிரதமா் நரேந்திர மோடியின் ஆற்றலும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் நம்பிக்கையும் பாஜக தலைவா் ஜெ.பி.நட்டாவின் ஊக்கமும் நம்மை முன்னோக்கி வழிநடத்தி செல்லும். பிரதமா் மோடியின் தலைமையில் ஒடிஸா மாற்றத்தைக் காண உள்ளது. மாநிலத்தின் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்துக்கு பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைக்கும்’ என்றாா். மஹ்தாபுடன் முன்னாள் பிஜேடி எம்.பி. சித்தாந்த் மொஹபத்ரா, பிரபல சந்தாலி எழுத்தாளா் தமயந்தி பெஷ்ரா ஆகியோரும் பாஜகவில் இணைந்தனா்.
தொடர்புடையது

திமுகவில் இணைந்தாா் அஜிதா ஆக்னல்
புதுகை தொகுதியின் பாஜக வேட்பாளா் சொத்து மதிப்பு ரூ. 20.50 கோடி

புதுச்சேரியில் 40 நிமிஷங்கள் பிரதமா் மோடி ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு

அஸ்ஸாம்: பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.பி.
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


