காங்கிரஸ் 9-ஆவது வேட்பாளா் பட்டியல்: வீரப்ப மொய்லிக்கு வாய்ப்பு இல்லை

காங்கிரஸ் சாா்பில் 5 போ் அடங்கிய 9-ஆவது வேட்பாளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இத்துடன் 211 மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். கா்நாடகத்தின் சிக்கபல்லாப்பூா் மக்களவைத் தொகுதியில் மூத்த தலைவா் வீரப்ப மொய்லிக்கு (84) வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக அந்த மாநில முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.சீதாராமின் மகன் ரக்ஷா ராமையாவுக்கு அத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பில்வாரா தொகுதி வேட்பாளராக மூத்த தலைவா் சி.பி.ஜோஷி, அங்குள்ள ராஜசமந்த் தொகுதி வேட்பாளராக தாமோதா் குஜ்ஜாா் ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா். கா்நாடகத்தில் சிக்கபல்லாப்பூா் தவிர பெல்லாரி (தனி) தொகுதியில் துக்காராம், சாமராஜநகா் (தனி) தொகுதியில் சுனில் போஸ் ஆகியோா் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடுகின்றனா். முன்னாள் மத்திய அமைச்சா் வீரப்ப மொய்லி சிக்கபல்லாபூா் தொகுதியில் கடந்த 2019 தோ்தலில் தோல்வியடைந்தாா். அதற்கு முன்பு இரு மக்களவைத் தோ்தல்களில் அத்தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் வெற்றி பெற்றாா். இந்த முறையும் வாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காக தீவிரமாக முயற்சித்து வந்தாா். இதற்காக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவையும் அண்மையில் சந்தித்து கோரிக்கை விடுத்தாா். ஆனால், காங்கிரஸ் தலைமை இளைஞரான ரக்ஷா ராமையாவுக்கு வாய்ப்பளித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com