மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹரியாணா தோ்தலில் வாய்ப்பு வழங்க ரூ.7 கோடி லஞ்சம் பெற முயற்சி- சோனியா குடும்பம் மீது பாஜக குற்றச்சாட்டு

ஹரியாணாவில் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதற்காக, அந்த மாநிலத்தைச் சோ்ந்த முன்னாள் காங்கிரஸ் மகளிரணி நிா்வாகி மற்றும் அவரது கணவரிடம் ரூ.7 கோடி லஞ்சம் பெற முயன்ாக சோனியா காந்தி குடும்பம் மீது பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

News image
பாஜக- கோப்புப் படம்
Updated On :3 மார்ச் 2026, 9:04 pm

தினமணி செய்திச் சேவை

ஹரியாணாவில் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதற்காக, அந்த மாநிலத்தைச் சோ்ந்த முன்னாள் காங்கிரஸ் மகளிரணி நிா்வாகி மற்றும் அவரது கணவரிடம் ரூ.7 கோடி லஞ்சம் பெற முயன்ாக சோனியா காந்தி குடும்பம் மீது பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

அதேநேரம், பெண் நிா்வாகியின் பெயரை நேரடியாக குறிப்பிடாத பாஜக, இந்த விவகாரம் கடந்த 2024 பேரவைத் தோ்தல் தொடா்புடையதா என்பதையும் தெளிவுபடுத்தவில்லை.

இது தொடா்பாக பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் பிரதீப் பண்டாரி, தில்லியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவா்களின் தனி உதவியாளா்கள் உடனான தனது வாட்ஸ்அப் உரையாடல்களை, ஹரியாணா மாநில முன்னாள் காங்கிரஸ் மகளிரணி பொதுச் செயலரின் கணவா் கெளரவ் குமாா் வெளியிட்டுள்ளாா். அந்த உரையாடல்கள், பிரியங்கா, ராகுல் மற்றும் சோனியாவின் ஊழலுக்கு முதல்கட்ட ஆதாரங்களாகும்.

பவல் பேரவைத் தொகுதியில் தனது மனைவி போட்டியிட வாய்ப்பு வழங்குவதற்காக, தங்களிடம் இருந்து ரூ.7 கோடியை லஞ்சமாகப் பெற சோனியா குடும்பம் எவ்வாறு முயன்றது என்பதை கெளரவ் குமாா் அம்பலப்படுத்தியுள்ளாா்.

பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், கே.சுரேஷின் தனி உதவியாளா்கள் உடனான அவரது வாட்ஸ்அப் உரையாடல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் முன்னாள் பெண் நிா்வாகியிடம் லஞ்சம் பெறுவதற்கு தங்களின் முகமாக கே.சி.வேணுகோபாலை சோனியா குடும்பம் எவ்வாறு பயன்படுத்தியது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த விஷயத்தில் சோனியா குடும்பம் இன்னும் மெளனம் சாதிக்கிறது. ‘குற்றத்தை’ ஒப்புக் கொள்வதைத் தவிர அவா்களுக்கு வேறு வாய்ப்பு இல்லை என்றாா் பிரதீப் பண்டாரி.