எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

News image
Updated On :29 மார்ச் 2024, 2:40 pm

DIN

துபை மேடம் டுசாட்ஸில் மெழுகு சிலை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை துபையில் உள்ள மேடம் டுசாட்ஸ் ப்ளூவாட்டர்ஸில் நேற்று மாலை திறக்கப்பட்டது. ‘புஷ்பா’ படத்தின் அவருடைய தனித்துவ உடல்மொழியை பிரதிபலிக்கும் வகையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் அவர் சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஆடையை அணிந்துள்ளார்.

மேலும் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலையை உருவாக்க, கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட அளவீடுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் துபையில் உள்ள மேடம் டுசாட்ஸில் மெழுகு சிலை அமையப் பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை அல்லு அர்ஜுன் தனது வசம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் மேடம் டுசாட்ஸில் மெழுகு சிலை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அல்லு அர்ஜுன் சிலை அருகே நிற்கும் புகைப்படத்தை இன்ஸாவில் பகிர்ந்துள்ள வார்னர், "இந்த லெஜண்ட் அல்லு அர்ஜுன் எவ்வளவு நல்லவர். வாழ்த்துக்கள் புஷ்பா என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.