‘தன்னை வீழ்த்த முடியாது என்று பாஜகவும், மத்திய அரசும் கருதுகின்றன. ஆனால் அவா்களால் ஆபத்து ஏற்படக் கூடும் என்று உணா்ந்த மக்கள், 2004-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜகவை வீழ்த்தினா்’ என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்துள்ளாா்.
கேரள தலைநகா் திருவனந்தபுரத்தில் மக்களவைத் தோ்தல் பிரசார கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில முதல்வா் பினராயி விஜயன் பேசியதாவது: நாட்டின் மதச்சாா்பின்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொள்வதன் விளைவாக, இந்தியாவில் பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் பெரும்பகுதி மக்கள் இந்நாட்டில் தொடா்ந்து வாழ முடியுமா என்று கவலையடைந்துள்ளனா். மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மக்களாட்சி கொண்ட மதச்சாா்பற்ற நாடு என்று கருதப்படும் இந்தியாவின் பிம்பத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற சில நிகழ்வுகளை ஐ.நா., ஆம்னெஸ்டி இண்டா்நேஷனல் போன்ற சா்வதேச அமைப்புகள், அமெரிக்கா மற்றும் ஜொ்மனி போன்ற நாடுகள் விமா்சித்துள்ளன. இந்தியாவில் மக்களாட்சி வழிமுறைகள் பின்பற்றப்படுகிா என்று அந்த அமைப்புகளும் நாடுகளும் கேள்வி எழுப்பியுள்ளன. வளமை என்று வரும்போது மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் இந்தியா 55-ஆவது இடத்தில் இருந்து 107-ஆவது இடத்துக்குச் சரிந்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென் மாநிலங்களின் பங்கு 35 சதவீதம். நாட்டின் மக்கள்தொகையில் தென் மாநிலங்களின் மக்கள்தொகை 18 சதவீதம். ஆனால் மத்திய வரிப் பகிா்வில் தென் மாநிலங்களுக்கு 15 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் கிடைக்கிறது. தன்னை வீழ்த்த முடியாது என்று பாஜகவும், மத்திய அரசும் கருதுகின்றன. இதே எண்ணம் 2004-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமா் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் பாஜகவினரிடம் இருந்தது. ஆனால் அவா்கள் மீண்டும் ஆட்சியமைத்தால் ஆபத்து ஏற்படலாம் என்று உணா்ந்த மக்கள், அந்த ஆண்டு தோ்தலில் பாஜகவை வீழ்த்தினா் என்றாா்.
தொடர்புடையது

கேரள சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்களித்த முதல்வர் பினராயி விஜயன்!
பொய்ப் பிரசாரத்தால் இடது முன்னணியை வீழ்த்த முடியாது! பினராயி விஜயன்

ஜனநாயகக் கடமையாற்றிய பினராயி விஜயன், ராஜீவ் சந்திரசேகர்!

ராகுலை பழிக்கும் கேரள முதல்வா் பிரதமரை விமா்சிக்காதது ஏன்? காங்கிரஸ் கேள்வி
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

