மக்களவை தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸில் பிளவு ஏற்படும்: பொம்மை

Congress
Congress

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கர்நாடகத்தில் காங்கிரஸ் பிளவுபடும் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் பசுவராஜ் பொம்பை தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, கர்நாடகத்தில் மூன்று மாதங்களுக்குள் காங்கிரஸ் பிளவுபடும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

வம்ச அரசியலே காங்கிரஸின் அடையாளமாக இருந்துவருகிறது. ஆனால் இந்த முறை அமைச்சர்கள் மற்றும் உறவினர்களுக்கு அதிக இடங்கள் கொடுத்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுமாறு பத்து அமைச்சர்களை உயர்மட்டக் குழு கேட்டுக் கொண்டது, ஆனால் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. தகுந்த வேட்பாளர்களைப் பரிந்துரைக்கும்படி மத்திய தலைவர்கள் கேட்டபோது, ​​அவர்கள் தங்கள் மகன்கள், மகள்கள், மருமகன், மருமகள் மற்றும் சகோதரர் ஆகியோருக்கு இடங்கள் பெற்றனர்.

வாக்காளர்கள் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளதால் இது கட்சிக்குப் பலன் அளிக்காது என்று பொம்மை கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com