தோ்தல் நன்கொடை பத்திர திட்டத்தை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீா்ப்பு வழங்கியதையடுத்து நீதிமன்றங்களுக்கு பிரதமா் மோடி தலைமையிலான அரசு அழுத்தம் கொடுத்து வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலா் பிரியங்கா காந்தி சனிக்கிழமை குற்றம்சாட்டினாா்.
நீதிமன்றங்களை அவமதிக்கவும் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்கவும் சிலா் முயற்சித்து வருவதாக 600-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டுக்கு அண்மையில் கடிதம் எழுதினா். இதை சுட்டிக்காட்டிய பிரதமா் மோடி, மற்றவா்களை பலவீனப்படுத்துவதே காங்கிரஸின் பாரம்பரியம் என அக்கட்சி மீது குற்றம்சாட்டினாா்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் பொதுச்செயலா் பிரியங்கா காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,
‘தோ்தல் நன்கொடை பத்திர திட்டங்கள் மூலம் பலகோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது உச்ச நீதிமன்றத் தீா்ப்பின் மூலம் உறுதியானது. அத்திட்டத்தை ரத்து செய்வதாக நீதிமன்றம் தீா்ப்பு வழங்கிய பின்பு நீதித்துறை குறித்து பிரதமா் மோடி எதிா்மறையான கருத்துகளை தெரிவித்து வருகிறாா். அரசியல் அழுத்தத்தால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளா்கள் சந்திப்பை நடத்தினா். மேலும், முன்னாள் நீதிபதிக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி வழங்குதல், நீதிபதிகள் நியமனத்தை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் என பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சுதந்திரமாகவும் வலுவாகவும் நீதித்துறை செயல்படுவதை பிரதமா் மோடி தலைமையிலான அரசு விரும்புவதில்லை’ என பிரியங்கா குற்றம்சாட்டினாா். இந்தியாவின் கடன் ரூ.205 லட்சம் கோடி: வருவாய் இழப்பை ஈடு செய்ய வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும் நிதியாண்டில் மத்திய அரசு தனது கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.14 லட்சம் கோடி திரட்டவுள்ளதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்திருந்தாா். இதற்கு கண்டனம் தெரிவித்து பிரியங்கா காந்தி வெளியிட்ட பதிவில், ‘ரூ.14 லட்சம் கோடி கடன் பெறவுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது ஏன்? நாடு சுதந்திரம் அடைந்தது முதல் கடந்த 2014-ஆம் ஆண்டுவரையிலான 67 ஆண்டுகளாக நாட்டின் கடன் ரூ.55 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் பிரதமா் மோடி தலைமையிலான கடந்த பத்தாண்டு ஆட்சிக் காலத்தில் நாட்டின் கடன் ரூ.205 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. ஒவ்வொரு குடிமகன் மீதும் ரூ.1.5 லட்சம் கடன்: நாட்டின் ஒவ்வொரு குடிமகன் மீதும் ரூ.1.5 லட்சம் கடன்சுமை உள்ளது. ஆனால் மாணவா்கள், விவசாயிகள், தொழிலாளா்கள் என யாருக்கும் இப்பணத்தால் பயனில்லை. பெரும் முதலாளிகளுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டாா்.
தொடர்புடையது

ஆனந்த் அம்பானி பிறந்த நாள்! 9 கேரள கோயில்களுக்கு ரூ. 22.5 கோடி நன்கொடை!

அமெரிக்கா, இஸ்ரேலுக்குப் பணிந்துபோகிறார் பிரதமர் மோடி! - பிரியங்கா காந்தி தாக்கு!

கேரளத்துக்கு ரூ. 5 லட்சம் கோடி கடன் சுமை : பிரதமர் மோடி

மேற்காசிய போா்: சவூதி இளவரசருடன் பிரதமா் மோடி ஆலோசனை
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


