400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக-வுக்கு தோல்வி நிச்சயம்: அகிலேஷ் யாதவ்

எதிர்க்கட்சித் தலைவர்களைத் தாக்குவதற்கு ஆளும் பாஜக மத்திய அமைப்புகளைப் பயன்படுத்துகிறது
400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக-வுக்கு தோல்வி நிச்சயம்: அகிலேஷ் யாதவ்

புது தில்லி: எதிர்க்கட்சித் தலைவர்களைத் தாக்குவதற்கு ஆளும் பாஜக மத்திய அமைப்புகளைப் பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், நாட்டில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், வரும் மக்களவைத் தேர்தலில் அந்த கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும், வரும் தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக-வுக்கு தோல்வி நிச்சயம் என்று கூறினார்.

தில்லி கலால் கொள்கை தொடா்புடைய பண மோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கடந்த மாா்ச் 21-ஆம் தேதி அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டாா்.

இந்தநிலையில், அரவிந்த் கேஜரிவாலின் கைது நடவடிக்கையைக் கண்டித்து ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் தில்லி ராம் லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை(மார்ச். 31) மெகா பேரணி நடத்தப்பட்டது. அதில் பங்கேற்று பேசிய உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ள பாஜக எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அமைப்புகளைப் பயன்படுத்துவது ஏன்?, எதிா்க்கட்சிகளை பலவீனப்படுத்த பாஜக வரி பயங்கரவாதத்தை கையாளுவது ஏன்?, “400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களைக் கண்டு ஏன் பயப்படுகிறீர்கள்? கேஜரிவால்,ஹேமந்த் சோரனை ஏன் சிறைக்கு அனுப்பியுள்ளீர்கள் என்று அகிலேஷ் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினார்.

400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக-வுக்கு தோல்வி நிச்சயம்: அகிலேஷ் யாதவ்
"அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடி - பாஜகவின் செல்கள்": தேஜஸ்வி யாதவ் விமர்சனம்

தோ்தல் பத்திர ஊழல் மூலம் பாஜக சுமாா் ரூ.8,250 கோடியை நன்கொடையாக வசூலித்துள்ள உண்மை நாடு முழுவதும் அறியப்பட்டுள்ளது. தோ்தல் பத்திரங்கள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பாஜகவின் தோ்தல் பத்திர ஊழல் மறைப்பதற்காகவே எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ போன்ற மத்திய அமைப்புகளைப் பயன்படுத்துகிறது என்பது நாட்டுக்கே தெரியும். மேலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன,'' என்றார்.

பாஜகவை தோற்கடிக்க வேண்டும்

மேலும் "உங்கள் வாக்கு மூலம் பாஜகவை தோற்கடித்து, வீட்டுக்கு அனுப்புங்கள். உங்கள் வாக்கு மூலம் தான் நாடு காப்பாற்றப்படும். உங்கள் வாக்கு ஜனநாயகத்தைக் காப்பாற்றும், உங்கள் வாக்கு அரசியல் சாசனத்தைக் காப்பாற்றும், இடஒதுக்கீட்டைக் காப்பாற்றும், உங்கள் வாக்கு மூலம் தான் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர் ஆகியவற்றைக் காப்பாற்ற செய்ய வேண்டிய வேலைகளை செயல்படுத்த முடியும்" என்று அகிலேஷ் கூறினார்.

ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன்

ஹேமந்த் சோரன் எந்த ஆதாரமும் இல்லாமல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதாகவும், அவர் தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக பாடுபட்டார். இது பாஜகவை அமைதியடையச் செய்தது” என்று சம்பாய் சோரன் கூறினார்.

மேலும் நாட்டில் பாஜகவின் சித்தாந்தம் மற்றும் எதேச்சதிகாரம் வளர அனுமதிக்க மாட்டோம். எதிர்க்கட்சிகளின் மெகா பேரணி ஜனநாயகத்தை காப்பாற்ற நாமெல்லாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்ற செய்தியை வெளிப்படுத்தும் என்றும் சம்பாய் சோரன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com