மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தந்தையின் கொலை சதியால் மகன் உயிரிழப்பு: தில்லி காவல்துறை- கொலையாளி கைது
மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

மகனைக் கொல்ல தந்தையால் நியமிக்கப்பட்ட இளைஞரைக் கைது செய்துள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளனர். மார்ச் முதல் தலைமறைவாக இருந்த குற்றவாளி லக்‌ஷய் என்கிற அன்குஷை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மார்ச் 7-ம் தேதி இரும்புக் கம்பி மற்றும் கத்தரிகோல் கொண்டு கெளரவ் என்பவரை லக்‌ஷய் தாக்கியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கெளரவ் இறந்துள்ளார்.

விசாரணையின்போது கெளரவ்வின் தந்தை இந்த சதியை திட்டமிட்டதாகவும் அதற்காக லக்‌ஷய், சாஹில் மற்றும் அபிஷேக் ஆகிய இளைஞர்களின் உதவியை நாடியதும் தெரிய வந்துள்ளது.

குற்றம் சுமத்தப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் லக்‌ஷய் தலைமறைவாக இருந்துள்ளார்.

மும்பைக்குச் சென்று பதுங்கியதாகவும் லக்‌ஷய் மீண்டும் தில்லி வருவதையும் போலீஸார் கண்டறிந்து தில்லியில் அவரைக் கைது செய்ததாக தெரிவித்தனர்.

விசாரணையின் போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட லக்‌ஷய், கெளரவ்வின் தந்தை தங்களிடம் ரூ.75 ஆயிரம் கொடுப்பதாகக் கூறி கொலை செய்யுமாறு கேட்டதையும் தெரிவித்ததாக காவலர்கள் குறிப்பிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com