பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால் உண்மையாகாது என்று மோடிக்கு கார்கே எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவருக்கு கார்கே கடிதம்
குடியரசுத் தலைவருக்கு கார்கே கடிதம்

புது தில்லி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது என்ன என்பது குறித்து பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கக் கடிதம் எழுதியிருக்கிறார்.

பிரதமர் மோடிக்கு தான் எழுதிய கடிதத்தின் முழு விவரத்தையும், அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

அதில், அன்புக்குரிய பிரதமருக்கு என கடிதம் தொடங்கப்பட்டிருக்கிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் மக்களுக்கு என்னசொல்ல வேண்டும் என்று கூறி தாங்கள் அனுப்பிய கடிதத்தைப் பார்த்தேன். கடிதத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள், பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவரின் மரியாதைக்குரியதாக இல்லை. இதுவரை நீங்கள் சொல்லி வந்த பொய்களை எல்லாம், ஒலிப்பெருக்கிகள் போல, உங்கள் வேட்பாளர்களையும் சொல்லச்சொல்லியிருக்கிறார்கள். ஒரு பொய்யை ஆயிரம் முறை சொன்னால் அது உண்மையாகாது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது, உறுதியளித்திருக்கிறோம் என்பதை அவர்களாகவே படித்து புரிந்துகொள்ளும் வகையில் வாக்காளர்கள் அனைவரும் புத்திசாலிகளே. எங்களது வாக்குறுதிகள் எளிமையானவை, தெளிவானவை. அவற்றை விளக்க வேண்டியதில்லை, ஆனால், உங்கள் நன்மை கருதி அதனை விளக்கியிருக்கிறேன்.

குடியரசுத் தலைவருக்கு கார்கே கடிதம்
வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

1. இளைஞர்களுக்கான நீதி - உங்கள் கொள்கைகளால் வேலையில்லாமல் வாடும் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என்ற உறுதி. இளைஞர்களுக்கு காங்கிரஸ் முதலில் வேலை வழங்கும் என்பதே அது.

2. பெண்களுக்கான நீதி - உங்கள் ஆட்சிக்காலத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட துன்புறுத்தல்களுக்கு எதிராக, நாட்டில் உள்ள பெண்களுக்கு அதிகாரம் பெற்றுத்தருதல்.

3. விவசாயிகளுக்கான நீதி - உரிய விலை கேட்டதற்காக சுடப்பட்டு, அடித்துத் துன்புறுத்தப்பட்ட விவசாயிகளுக்கு அதிகாரம்.

4. தொழிலாளர்களுக்கான நீதி - தொழிலதிபர்களுக்கான உங்கள் மத்திய அரசின் நடவடிக்கைகளால் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அதிகாரம் கிடைத்தல்.

5. ஏழைகளுக்கான நீதி - ஏழைகளுக்கு அவர்களுக்கான நியாயம் கிடைப்பதற்கான அதிகாரம், என அனைவருக்குமான நியாயமே காங்கிரஸ் வாக்குறுதி என்று தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவருக்கு கார்கே கடிதம்
ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

காங்கிரஸ் சமாதான அரசியல் செய்வதாகக் குறிப்பிடுகிறீர்கள், ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக, சீனத்துடன் நீங்களும் உங்கள் அமைச்சர்களும் சமாதானம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள், பொதுவெளியில், சீனத்துக்கு நீங்கள் அளிக்கும் நற்சான்றிதழ், நமது நாட்டை பலவீனப்படுத்திவிடுகிறது. தொடர்ந்து சீனம், நமது எல்லையில் அத்துமீறுகிறது.

உங்கள் கடிதத்தில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி-களிடமிருந்து எங்களால் இடஒதுக்கீடு பறிக்கப்பட்டு "எங்கள் வாக்கு வங்கிக்கு" வழங்கப்படும் என்று கூறுகிறீர்கள். எங்களது வாக்கு வங்கி என்பது ஒவ்வொரு இந்தியரும் - ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள், பெண்கள், ஆர்வமுள்ள இளைஞர்கள், தொழிலாளர்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர்தான்.

1947 முதல் இடஒதுக்கீட்டை ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்த்தது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகதான் என்பது அனைவருக்கும் தெரியும். இடஒதுக்கீட்டை ஒழிக்க அரசியல் சட்டத்தை மாற்ற நினைப்பது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தான் என்பது அனைவருக்கும் தெரியும். உங்கள் தலைவர்கள் அதை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்கள். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 16வது பிரிவின்படி மக்கள்தொகை அடிப்படையில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கார்கே கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com