போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு! மதுரை நகைக்கடை திருட்டு! இருவர் கைது! திருடனை அடையாளம் கண்டது எப்படி?விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த தமிழகம்: டிடிவி தினகரன் விமர்சனம் மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் மரணம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா? இந்தத் தவறை மட்டும் செய்ய வேண்டாம்!மைக்ரோசாஃப்ட் சேவைகள் மீண்டன! இணையவழி தாக்குதல்கள் ஏதும் இல்லை!மேக்கேதாட்டு: யார் வேண்டுமானாலும் கண்டனம் தெரிவிக்கட்டும், கவலையில்லை! டி.கே. சிவகுமார் பதில்

கேஜரிவால் கைதுக்கு சதிதான் காரணம் என ஒப்புக்கொண்ட அமித் ஷா: அதிஷி

கேஜரிவாலை கைது செய்து சிறையில் அடைக்கும் எண்ணம் பாஜக ஆளும் மத்திய அரசுக்கும் சம்மன் அனுப்பிய முதல் நாளிலேயே இருந்தது..

Updated On :

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத்துறையின் சதித்திட்டத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அமித் ஷா தெளிவுபடுத்தியதாக அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.

கேஜரிவாலுக்கு முதன்முறையாக சம்மன் அனுப்பியபோது அவரை கைது செய்வதற்காக அமலாக்கத்துறை செய்த சதித்திட்டம் எனச் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

இவை அமலாக்கத்துறை அல்ல, பாஜவின் சம்மன்கள். பாஜகவின் 10 ஆண்டுக்கால தவறான ஆட்சியை கேஜரிவால் அம்பலப்படுத்துவார் என்று பாஜகவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

அரவிந்த் கேஜரிவாலை கைது செய்து சிறையில் அடைக்கும் எண்ணம் பாஜக ஆளும் மத்திய அரசுக்கும் அவர்களின் அமலாக்க அமைப்புக்கும் சம்மன் அனுப்பிய முதல் நாளிலேயே இருந்ததாக அமித் ஷா கூறினார்.

கேஜரிவாலை அழைத்து அவரை கைது செய்வதற்கான சாக்குப்போக்குதான் சம்மன்கள் என்று அமித்ஷா கூறியதாக அதிஷி செய்தியார்களுடன் சந்திப்பில் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.